சினிமா பிக்பாஸ்

வழக்கத்துக்கு மாறாக செய்த கமல்! ஏமாற்றத்தில் போட்டியாளர்கள்!

Summary:

Bigg boss nomination

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறி புதிதாக நடிகை கஸ்த்தூரி 17 வது போட்டியாளராக வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்க்குள் சென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற போறது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் லாஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்களை சந்திக்க கமல் வருவது வழக்கம்.

மேலும், நாமினேட் செய்யப்பட்ட யாரவது ஒருவரை கமல் காப்பாற்றுவார். அந்த வகையில் கமல் இன்று யாரை காப்பாற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கமல் இன்று யாரையும் காப்பாற்றாமல் நாளை பார்த்துக்கொள்ளலாம் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.


Advertisement