பிக்பாஸ் வீட்டில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி? வீட்டில் இருந்து வெளியேற்றம்! தீயாய் பரவும் செய்தி.



Bigg boss madhumitha suicide attempt viral news

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. முக்கோண காதல் கதை, வணிதான் ரீ என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டை என பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நகர்கிறது. தற்போது பிக்பாஸ் இல்லத்தில் ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதில் நேற்றைய நிகழ்ச்சியில் இரு அணிகளும் மாறி மாறி சண்டை போட ஆண்கள் பக்கம் லாஷ்லியாவும், பெண்கள் பக்கம் சேரனும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் லாஷ்லியா மதுமிதாவை கிழித்து தொங்கவிட்டார்.

bigg boss tamil

இந்நிலையில் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாகவும், அவர் விரைவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என சமூக வலைதள பதிவு ஓன்று வைரலாகிவருகிறது. கிஷோர் கே ஸ்வாமி என்பவர் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஏறகனவே வனிதா, அபிராமி, முகின் பிரச்சனையில் வனிதா முகினிடம் அடிவாங்கியதாக அவர் கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? பொய்யா? எனத் தெரியவில்லை இருந்தாலும் இந்த தகவல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.