அச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை! புகைப்பட ஆதாரம் இதோ!

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இரண்டாவது வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபுவும், அதன்பின்னர் வனிதா, நேற்று மோகன் வைத்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 13 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து இன்றுவரை இளைஞர்களின் கனவு கனவு கன்னியாக இருந்து வருகிறார். வீட்டில் உள்ளவர்களில் சேரனிடம் தான் இவர் மிகவும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகுகிறார்.
இதற்கு காரணம் இயக்குனர் சேரன் பார்ப்பதற்கு லாஷ்லியாவின் தந்தை போலவே இருக்கிறார் என கூறினார் லாஷ்லியா. இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் சேரனும், லாஸ்லியாவின் தந்தையும் ஒரே மாதிரி இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.