சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வருவதற்கு முன்பு லாஷ்லியா நடித்த விளம்பரத்தை பாத்துருக்கீங்களா? இதோ!

Summary:

Bigg boss lashliya advertisement video

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 43 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சரவணனை சேர்ந்து இதுவரை 6 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 10 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். முக்கோண காதல் கதையில் பிசியாக இருந்த பிக்பாஸ் இல்லம் தற்போது சரவணனின் திடீர் வெளியேற்றத்தால் பரபரப்பில் உள்ளது.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஷ்லியா ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளராக வளம் வருகிறார். இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத இவர் முதல் முறையாக கவினுடனான முக்கோண காதல் கதையில் சிக்கி தவித்து வருகிறார்.

இந்நிலையில் லாஷ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு அவர் நடித்த விளம்பர படம் ஓன்று தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. லாஷ்லியா ஆர்மியினர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாகிவருகின்றனர். இதோ அந்த வீடியோ.


Advertisement