சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கவின் வாழ்வில் இப்படி ஒரு சோதனைகளா? இதுவரை வெளிவராத தகவல்!

Summary:

Bigg boss kavin unknown secrets before bigg boss

பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கவின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமான இவர் பீசா, இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன் போன்ற படங்களில் கௌரவ வேடங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மிகவும் ஜாலியாக இருந்த கவின் அபிராமி, ஷாக்க்ஷி மற்றும் லாஷ்லியாவுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சைகளால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையிலதான் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் இரண்டு நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் கவின் பட்ட கஷ்டங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருசில படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ள கவின் தனி ஹீரோவாக அவர் நடித்த நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் இவரது முதல் படமே வெளியாகாததால் வந்த வாய்ப்புகள் அனைத்தும் தட்டி போய்யுள்ளது. இதனால் வாய்ப்பு  இல்லாமல் இருந்த கவின் ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்ததாகவும், சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாமல் உடல் எடை மெலிந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒருவழியாக முதல் படமான நட்புனா என்னனு தெரியுமா படம் வெளியானாலும் பெரிய படங்களின் வருகையால் அந்த படமும் சரியாக ஓடவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் கவினை நிராகரித்துள்ளனர். இந்நிலையில்தான் கவின் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.


Advertisement