லாஷ்லியாவின் கழுத்தில் தாலி கட்டினாரா கவின்? வீடியோ பார்த்து கமெண்ட் செய்துவரும் ரசிகர்கள்.

Bigg boss kavin knock for lasliya


bigg-boss-kavin-knock-for-lasliya

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 65 நாட்களை கடந்துவிட நிலையில் இந்த சீசனை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 16 பேர் பங்கேற்ற நிலையில் தற்போது 8 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் மீதம் உள்ளனர்.

இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஷ்லியாவும் ஒருவர். லாஷ்லியாவும், நடிகர் கவினும் காதலிப்பதுபோல் நிகழ்ச்சியில் காட்டப்படுகிறது. இவர்கள் இருவர் குறித்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நமது பாரமப்பரியத்தை பறைசாற்றும் வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து பொம்மைகளை வைத்து நாடகம் போட்டு காண்பித்தனர். இதில் ஆண்கள் வேட்டி சட்டை அணிந்தும், பெண்கள் பாவாடை தாவணி மற்றும் சேலை அணிந்தும் காட்சியளித்தனர்.

இதில் போட்டி தொடங்கும் முன் லாஷ்லியாவின் கழுத்தில் கவின் கயிறு கட்டிவிடுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கவின் லாஷ்லியாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டதாகவும், திருமணம் முடிந்துவிட்டதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

bigg boss tamil