சினிமா Bigg Boss

நிச்சயமாக என்னையெல்லாம் மீண்டும் கூப்பிட மாட்டார்கள்...! காஜல் பேச்சு...!

Summary:

bigg-boss-kajal-news

இன்றைய காலகட்டத்தில் சினிமாவை விட அதிக ரசிகர்கள் உள்ளது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான். தொலைக்காட்சிகள் மட்டுமே பார்க்கும் ரசிகர்களும் இங்கு ஏராளம். அதிலும் குறிப்பாக ரியாலிட்டி ஷோ விற்கு தான் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக 100 நாட்கள் ஓடும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் சென்ற வருடம் பிரபலமானது. 

ஆனால் இந்நிலையில் சென்ற வருடம் சீசன் போல இல்லாமல் இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என தான் கூற வேண்டும். இந்நிலையில் நிகழ்ச்சியின் போக்கை மாற்றும் பொருட்டு முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளனர்.
சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 முதல் சீசன் போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் மற்ற போட்டியாளர்கள் இரண்டாவது சீசனிற்கு வந்தது மகிழ்ச்சி தான் அனால் என்னை யாரும் கூப்பிட மாட்டாங்க என பிரபல நடிகை காஜல் கூறியுள்ளார். முதல் சீசனில் பங்கேற்றிருந்த நடிகை காஜல் பசுபதி டுவிட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது ” என்னை பிக்பாஸ்ஸுக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள்… நான் மகிழ்ச்சி பற்றி வெளியில் குறை சொல்லி பேசிவிட்டேன் ” என கூறியுள்ளார்.


Advertisement