அட.. பிக்பாஸ் ஆரியா இது.? தலைவர் அப்போவே அப்படி.. கூட யார் இருக்கா பாருங்க.. வைரல் புகைப்படம்..
இளம் வயதில் நடிகர் ஆரி நடிகை ஐஸ்வர்யா ராய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆரி. பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு, பிக்பாஸ் பட்டத்தையும் தட்டிச்சென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்கள் ஆரிக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர். மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகர் ஆரிக்கு ரசிகர் கூட்டமும் அதிகம் ஆனது என்றே சொல்லலாம். இந்நிலையியல் பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் ஆரி பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அந்த புகைப்படத்தில், நடிகர் ஆரியும் - ஐஸ்வர்யா ராயும் பேசிக்கொண்டிருப்பதுபோல் இருக்கும் காட்சியை, எங்க ஆரி அப்போவே அப்படி என, அவரை கெத்தாக குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.