பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இப்படி ஒரு காட்சி வந்ததே இல்லை! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்றுடன் 50 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் இதுவரை 7 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரமப்த்தில் இருந்தே சீசன் 3 பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
இதில் கவின், சாக்க்ஷி, லாஷ்லியாவின் முக்கோண காதல் கதை ஒருபக்கம் சுவாரசியமாக செல்ல கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நடிகை வனிதா நேற்றையதினம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவரையும் அதிர்ச்சி ஆக்கினார்.
இந்நிலையில் போட்டியாளர்கள் பற்றி அனைவரிடமும் கூறிய வனிதா இனி முகெனை நம்பாதே என்று அபிராமியிடம் கூறினார். இதனால் முகேன் மற்றும் அபிராமி உறவில் விரிசல் ஏற்பட்டு இன்று அடிதடி வரை சென்றுள்ளது. இன்று வந்த ப்ரோமோவில் இருவருக்கு வாக்குவாதம் முற்றியது, ஒரு கட்டத்தில் முகேன் அபிராமியை சேரை தூக்கி அடிக்க சென்றுவிட்டனர்.
இதுவரை எந்த ஒரு சீசனிலும் இப்படி ஒரு காட்சி நடந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த காட்சி.
#Day51 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil- தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/R86HfAXa26
— Vijay Television (@vijaytelevision) August 13, 2019