சினிமா பிக்பாஸ்

கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் இல்லம்! பிக்பாஸின் அறிவிப்பால் சோகத்தில் கதறி அழுகும் போட்டியாளர்கள்!

Summary:

Bigg boss contestants cries for saravanan

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றினர் பிக்பாஸ்.

பேருந்தில் பெண்களை உரசிய குற்றத்திற்காக ஏற்கனவே சரவணன் மன்னிப்பு கேட்டும் அதையும் மீறி நேற்று பிக்பாஸ் அவரை இல்லத்தை விட்டு வெளியேற்றினார். இந்த செய்தி மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியாத நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஒருசில காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக பிக்பாஸ் கூறுகிறார்.

சரவணன் ஏன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் என்பது தெரியாமல் மற்ற போட்டியாளர்கள் சோகத்தில் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ. 


Advertisement