ஆரம்பமே ரணகளமா.! முதல் நாளே நாமினேட் ஆன போட்டியாளர்கள்! யார் யார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

ஆரம்பமே ரணகளமா.! முதல் நாளே நாமினேட் ஆன போட்டியாளர்கள்! யார் யார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!


bigboss-ultimate-promo-viral-94XUN2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த நிலையில்  பிக்பாஸ் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி நேற்று மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. இதனை உலகநாயகன்  கமல் தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸின் 5 சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் முதல்நாளே பிக்பாஸ் நாமினேஷன் செய்ய கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் எலிமினேட் செய்வதற்கு போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். அதில் அதிகமாக வனிதா, அனிதா, சினேகன், பாலாஜி, ஜூலி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.