ஒட்டுமொத்த போட்டியாளர்களும் செய்த காரியம்! தாங்கமுடியாமல் கண்கலங்கிய சம்யுக்தா! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஆரிக்கு ஆதரவாக நின்ற நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சம்யுக்தா கண்கலங்கியுள்ளார்.


bigboss-today-second-promo-viral-HTURA8

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 சமீபத்தில் தொடங்கி இன்றுடன் 33 நாட்களை கடந்துள்ளது. வாக்குவாதங்கள், சண்டைகள், உற்சாகங்கள், விழாக்கள் என நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும். பரபரப்பாகவும் செல்லும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்கால்  போட்டியாளர்களுக்கு இடையே மோதல்கள் நீடித்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் முழுவதுமே போட்டியாளர்கள் அனைவரும் நடிகர் ஆரிக்கு எதிராகவும், குறை கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஆரிக்கும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக இருக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே ஒரு சில விஷயங்களால் வாக்குவாதமும் ஏற்பட்டு கடுமையானது.

இதற்கிடையில் இன்று பிக்பாஸ், வீட்டில் சிறப்பாக செயலாற்றிய மூன்று பேரை தேர்ந்தெடுத்து சொல்லுமாறு கூறிய நிலையில், போட்டியாளர்கள் பலரும் ஆரியை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் ஒரே நாளில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஆரிக்கு ஆதரவாக நின்ற நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சம்யுக்தா கண்கலங்கியுள்ளார். இந்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.