சினிமா

உங்கள் அன்பினால் மட்டுமே நான்.. செம கெத்தாக என்ட்ரி கொடுத்த உலக நாயகன்! மாஸ் வீடியோ!!

Summary:

உங்கள் அன்பினால் மட்டுமமே நான்.. செம கெத்தாக என்ட்ரி கொடுத்த உலக நாயகன்! மாஸ் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 3ம் தேதி பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கினால் தற்போது போட்டியாளர்கள் தங்களை சுற்றி கேமரா இருப்பதை மறந்து சுய ரூபங்களை காட்டத் துவங்கியுள்ளனர். நட்பு, காதலை விட இந்த சீசன் வாக்குவாதங்கள், மோதல்கள் போன்றவற்றிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது.

பிக்பாஸ் ஐந்து சீசன்களையும் உலகநாயகன் கமலே தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த வார இறுதியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆனால் அது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. மேலும் கமல் எப்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என கேள்வி எழுப்ப துவங்கினர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து முற்றிலும் மீண்ட கமல் இன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இன்றைக்கான ப்ரோமோவில் மாஸாக கெத்தாக வந்த கமல், உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான், இன்று உங்களுடன் மீண்டும் நான், என்றுமே உங்கள் நான் என கூறி பின் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement