சினிமா

இது கேவலம்.. அபிஷேக் சொன்ன அந்த வார்த்தையால் செம கடுப்பான அண்ணாச்சி! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

Summary:

இது கேவலம்.. அபிஷேக் சொன்ன அந்த வார்த்தையால் செம கடுப்பான அண்ணாச்சி! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு அனைத்து சீசன்களை போலவும் நட்பு,அன்பு, போட்டி, முதலியன விறுவிறுப்பை கிளப்பி நடைபெற்று வருகிறது. பல்வேறு துறையை சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கிய திரையில் திருநங்கையான நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டிருந்த நாடியா சாங் கடந்த வாரம் குறைந்து வாக்குகளைப்பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவும், ரணகளமாகவும் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அபிஷேக் டிவியில் முகம் தெரியும் என்றால் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் என்று கூறுகின்றார். உடனே இது கேவலம் என்று அண்ணாச்சி கூறுகின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


Advertisement