இதெல்லாம் துரோகம்! புலம்பி கதறிய தாமரை! ஏன்? அப்படி என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோ!!Bigboss today promo viral

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோலாகலமாக துவங்கியது. இதுவரை மூன்று வாரங்கள் கடந்த நிலையில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் திருநங்கை நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் நாடியா சாங் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்று அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் அபிஷேக் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆனார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் தாமரை வைத்திருந்த காற்று என்ற காயினை பாவனி மற்றும் சுருதி ஆகியோர் திருடியுள்ளனர். இதனால் கோபமடைந்த தாமரை துரோகம் செய்ததாக அவர்களிடம் சண்டையிடுகிறார். பின்னர் இறுதியில் கடவுளே என்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்டாங்களே என கூறி கண்கலங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.