சினிமா வீடியோ

இப்படி விளையாடுவதற்கு... கடுப்பில் பொங்கியெழுந்த ஆரி! எகிறி வந்த போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான முதல் ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் என மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.  அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதன்முதலாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார்.  

 இந்நிலையில் பிக்பாஸ் நேற்று சுவாரஸ்யமான டாஸ்க் ஒன்றை கொடுத்தது. அதன்படி போட்டியாளர்கள் பாதி பேர் அரக்கர்கள், அரக்கிகளை போலவும், மீதி பேர் அரச குடும்பத்தை போலவும் உடையணிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அரக்கர்களும், அரக்கிகளும் என்ன செய்தாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலையாக அமர்ந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். 

அந்த டாஸ்க் நேற்று பாதியிலேயே முடிவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. இன்று நேற்று அரக்கர், அரக்கியராக இருந்தவர்கள்  அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும்,  அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரக்கர், அரக்கியராகவும் மாறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில் ராஜாவாக இருக்கும் ஆரியை அரக்கர்கள் தொல்லை செய்யும்போது, அதனை பொறுத்துகொள்ள முடியாமல் அவர் கோபப்படுகிறார். மேலும் இப்படி விளையாடுவதற்கு வேற ஏதாவது பண்ணலாம் என கடுப்புடன் கூறுகிறார். இதனால் இன்று பிக்பாஸ் வீட்டில் பெரும் மோதல் எழலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

 


Advertisement