சினிமா

அடேங்கப்பா.. அப்பாவியாக இருக்கும் பிக்பாஸ் தாமரைச்செல்விதானா இது! வேற லெவல்தான்! வீடியோவை கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!

Summary:

அடேங்கப்பா.. அப்பாவியாக இருக்கும் பிக்பாஸ் தாமரைச்செல்விதானா இது! வேற லெவல்தான்! வீடியோவை கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நாடக கலைஞர் தாமரைச்செல்வி நாடக நடன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3 தொடங்கி நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் நாடக கலைஞர் தாமரை செல்வி.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தற்போது வள்ளி- தெய்வானை நாடகங்களில் நடித்து வருகிறார். இவர் பிக்பாஸ் வீட்டில் மிகவும் அமைதியாகவும், அனைவரிடமும் மிகவும் வெகுளிதனமாகவும் பேசி வருகிறார். மேலும் சிறு விஷயத்திற்கு கூட உடனே கண்கலங்கி விடுவார். 

அவர் அண்மையில் கடந்து வந்த பாதை டாஸ்கில் நான் பட்ட கஷ்டங்கள், தனது மகன் தன்னை பிரிந்து இருப்பது என பல தகவல்களை பகிர்ந்து கொண்டு பார்வையாளர்களை கண்கலங்க வைத்தார். இந்த நிலையில் தாமரைச்செல்வி வள்ளி திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் தாமரைச்செல்வியா இது? என ஷாக்காகியுள்ளனர்.


Advertisement