சினிமா

கமலுக்கு போட்டியாளர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! அடப்பாவமே.. கெஞ்சியபடி என்ன கேட்டுள்ளனர் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

Summary:

கமலுக்கு போட்டியாளர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! அடப்பாவமே.. கெஞ்சியபடி என்ன கேட்டுள்ளார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவராஷ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சில நாட்களிலேயே திருநங்கையான நமிதா மாரிமுத்து அவராவாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நாடியா சாங், அபிஷேக் மற்றும்  நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கால் பல மோதல்கள் வெடித்தது. மேலும் தீபாவளி கொண்டாட்டமும் கோலாகலமாக அரங்கேறியது. இந்நிலையில் இந்த வாரம் அக்ஷரா, சிபி, சுருதி, நிரூப் , பாவனி, அபினய் உள்ளிட்ட 9 பேர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் அபினய் மற்றும் சுருதி மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும் அவர்களில் யாரேனும் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

தமிழில் பிக்பாஸ் 5 சீசன்களையும் உலக நாயகன் கமலே வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, கமல் முன்பு வைத்திருந்த கேக், மற்றும் சாப்பாடு கொஞ்சம் கொடுத்து விடுங்கள் என கெஞ்சும்படியாக பாடலும் பாடியுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement