பாவனி செய்த காரியத்தால் பயங்கர சோகத்தில் மூழ்கிய வீடு! ஆனால் பின் என்ன நடந்தது பார்த்தீங்களா!! உணர்ச்சிபூர்வ வீடியோ!!bigboss-season-5-today-promo-viral-JXG783

கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு, கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த சீசன் சண்டை, மோதல், வாக்குவாதங்கள் என எதற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது. இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் பாவனி மற்றும் அபினய் இருவரும் காதலிப்பதாக கூறி போட்டியாளர்கள் புதிய சர்ச்சையை கிளப்பினர். இதனால் ஆவேசமடைந்த பாவனி நேற்று ராஜு மற்றும் சிபி மற்றும் சில போட்டியாளர்களிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பிக்பாஸ் வீடே ரணகளமானது. இந்நிலையில் இன்றைய நாளிற்கான ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், பாவனியின் சண்டையால் வீடே பயங்கர சோகத்தில் உள்ளது.  அப்பொழுது பாசத்திற்கு ஏங்குவது போல அவர் அமீரிடம் பேசியுள்ளார். அதற்கு அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் இதுதான் வாழ்க்கை, ராஜூதான் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என கூறினார் என்று கூறியுள்ளனர். உடனே உணர்ச்சிவசப்பட்ட பாவனி தான் சண்டை போட்ட போட்டியாளர்களை கட்டியணைத்து தனது அன்பினை வெளிக்காட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.