பிரியங்காவிடம் எகிறி வந்த நிரூப்! என்னா வார்த்தை சொல்லிட்டார் பார்த்தீங்களா! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!Bigboss season 5 today promo viral

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கபடும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது.
இதில் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். அதனை போட்டியாளர்கள் மிகவும் விறுவிறுப்பாகவும், திறமையாகவும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் அக்ஷரா, ராஜு, வருண், அபினய், பாவனி, பிரியங்கா உள்ளிட்ட பிரபலங்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்ற நிலையில் அபினய் குறைந்த வாக்குகளைப் பெற்று நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், நிரூப் மற்றும் பிரியங்காவிற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. நிரூப் மிகவும் கோபமாக பிரியங்காவிடம் கத்தியுள்ளார். மேலும் ஒரு கட்டத்தில், சுயநலவாதி, கொடூரமானவள், அடுத்தவங்க கஷ்டத்துல சந்தோஷப்பட்டு கொண்டாடுற ஒரே ஆள் நீதான் என ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வாயடைத்து போயுள்ளனர்.