சினிமா

பிக்பாஸ் சரித்திரத்திலேயே முதன் முறையாக.. புதிய வித்தியாசமான அறிவிப்பால் ரணகளமான பிக்பாஸ் வீடு! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

Summary:

பிக்பாஸ் சீசன் 4ன் இன்றைய முதல் ப்ரமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி  பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒரு வாரம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள்  வாக்குவாதங்கள், மோதல்கள், உற்சாகங்கள் என எதற்கும் குறைவில்லாமல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. 

 மேலும் திடுக்கிடும் பல மாற்றங்களும் நேர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளிற்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் முதன்முறையாக மக்களின் வாக்கினையே மாற்றியமைக்கும் எவிக்ஷன் ஃபிரி பாஸ் ஒன்றை பிக்பாஸ் வீட்டிற்குள்  அனுப்பியுள்ளது. இது இந்த சீசன் முழுவதும் செல்லுபடியாகும். 

இதில்  நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் சுயநலத்துடன் ஒவ்வொரு போட்டியாளர்களையும் வெளியேற்ற வேண்டும். இதனை வெளியே அமர்ந்து சில போட்டியாளர்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென ரியோ பெரும் உற்சாகமடைந்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement