
பிக்பாஸ் சம்யுக்தா, தொகுப்பாளினி பாவனாவுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் 56 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் அன்பு, காதல், சண்டை, மோதல், வாக்குவாதங்கள் என எதற்கும் பஞ்சமில்லாமல் சுவாரஸ்யமாக சென்று கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchis ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சம்யுக்தாவிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சம்யுக்தாவும், பிரபல தொகுப்பாளினியான பாவனாவும் நெருங்கிய தோழிகள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒரே மாதிரி உடையணிந்து ஒன்றாக நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement