இப்படியெல்லாம் கூட இருக்கும்ணு நினைச்சுகூட பாக்கலை! பெரும் வருத்தத்தில் பிக்பாஸ் ரைசா! இதனால்தானா?bigboss-raiza-post-image-with-mask

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரைசா வில்சன். சினிமாவில் வருவதற்கு முன்பு மாடலாக இருந்த பலமான விளம்பரங்களில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 1ன் மற்றொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமம் காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தற்போது தொடர்ந்து அவர் ஆலிஸ் என்ற படத்திலும் ஜி வி பிரகாஷ் நடித்து வரும் காதலிக்க நேரமில்லை என்ற படத்திலும் நடித்துள்ளார்.

 இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரைசா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு தற்போதும் அவர் கவர்ச்சியான உடையில் மாஸ்க் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர், மாடலிங்கில் முகத்தை மூடுவது போலகூட இருக்கும் என்று கொஞ்சம் கூட  நினைத்து பார்த்ததில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.