என்ன ஒரு ஆட்டம்... இரவு நேர பார்ட்டியில் தளபதி பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடும் ராஜூ! தீயாய் பரவும் வீடியோ....

என்ன ஒரு ஆட்டம்... இரவு நேர பார்ட்டியில் தளபதி பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடும் ராஜூ! தீயாய் பரவும் வீடியோ....


bigboss-raaju-dance-in-vijay-song

பிக்பாஸ் 5வது சீசனின் டைட்டில் வின்னர் ராஜூ வெறித்தனமாக நடனமாடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். அவர்களில் பாவனி, நிரூப், அமீர், ராஜு, பிரியங்கா ஆகியோர் மட்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்று, 50 லட்சத்தை தட்டிச் சென்றார்.

பிக் பாஸ் வெற்றியை தொடர்ந்து அடுத்து ராஜு என்ன செய்யப்போகிறார் என்பதை அரிய மக்கள்  அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள். இந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் தனது நண்பர்களை சந்திப்பது, சக போட்டியாளர்களை சந்திப்பது என ராஜு மிகவும் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் ராஜு அண்மையில் தனது சக போட்டியாளரான அமீர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். மேலும் அவர்களுடன் தளபதி விஜய்யின் பாடலுக்கு அமீர் குடும்பத்தினருடன் வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை  பெற்று வருகிறது.