அட, அட..பிக்பாஸ் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்! வேற லெவல் லுக்கில் போட்டியாளர்கள்! செம கலகலப்பான பிக்பாஸ் வீடு!

Summary:

பிக்பாஸ் இன்றைய நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதன்முதலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ தற்போது வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் அரக்கர்,  அரக்கியர், அரசன் போன்று வித்தியாசமாக உடையணிந்து முழுவதும் கெட்டப் மாற வேண்டும். இந்நிலையில் சுரேஷ் அரக்கரை போலவும், ரியோ  இரண்டாம் புலிகேசி அரசனைப் போலவும் வேடமணிந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் இத்தகைய ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.


Advertisement