சினிமா

மகன் ஏற்றுக்கொள்வாரா? சிரித்த முகத்துடன் வெள்ளந்தியாக வலம்வந்த தாமரைக்கு இவ்வளவு கஷ்டங்களா! கண்கலங்க வைத்த வீடியோ!!

Summary:

மகன் ஏற்றுக்கொள்வாரா? சிரித்த முகத்துடன் வெள்ளந்தியாக வலம்வந்த தாமரைக்கு இவ்வளவு கஷ்டங்களா! கண்கலங்க வைத்த வீடியோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பிரமாண்டமாக துவக்கமானது. இதில் பல்வேறு துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். முதன்முதலாக திருநங்கையான நமிதா மாரிமுத்து  போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் ஒரு சில காரணங்களால் சில நாட்களிலேயே அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த சீசனை போலவே அன்பு, பாசம், சண்டை, மோதல் என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை மற்றும் அவற்றில் சந்தித்த சோகங்கள் ஆகியவற்றை கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நாடகக் கலைஞரான தாமரைச்செல்வி தனது மகன் குறித்தும், அவரை பிரிந்திருப்பது குறித்தும் வேதனையுடன் கூறியுள்ளார். இதனைக் கேட்ட சக போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்கியுள்ளனர். மேலும் இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் வெள்ளந்தியாக வலம்வந்த தாமரைக்கு இவ்வளவு கஷ்டங்களா என வருத்தப்பட்டுள்ளனர்.


Advertisement