சினிமா

பிக்பாஸ் பாலாஜி வீட்டில் அரங்கேறிய கோலாகல கொண்டாட்டம்! அடேங்கப்பா.. யாரெல்லாம் வந்திருக்காங்க பார்த்தீங்களா!!

Summary:

பிக்பாஸ் பாலாஜி வீட்டில் அரங்கேறிய கோலாகல கொண்டாட்டம்! அடேங்கப்பா.. யாரெல்லாம் வந்திருக்காங்க பார்த்தீங்களா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும், ரணகளமாகவும் சென்று கொண்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது படவாய்ப்புகள் கிடைத்து பிரபலங்களாக உள்ளனர்.

அவ்வாறு பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் சக போட்டியாளர்களுடன் சண்டை, மற்றும் நடிகை ஷிவானியுடன் காதல் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி பெருமளவில் பிரபலமானார். மேலும் பாலாஜி தற்போது லிப்ரா புரடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்கும் படத்திலும் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் அண்மையில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த பிறந்தநாள் விழாவில் பிரேம்ஜி, ஷிவானி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளியிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

 

 


Advertisement