அடேங்கப்பா! பிக்பாஸ் லாஸ்லியா தற்போது என்ன செய்கிறார் பார்த்தீர்களா!! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!

அடேங்கப்பா! பிக்பாஸ் லாஸ்லியா தற்போது என்ன செய்கிறார் பார்த்தீர்களா!! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!



bigboss losliya latest photo viral

 பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.

 இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும்,  ஆர்மியும் உருவானது. மஅதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது.இருப்பினும் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வந்த அவர் 105 நாட்கள் கடந்து இறுதிவரை சென்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

bigboss

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து மிகவும் பிசியாக இருக்கும் லாஸ்லியா தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்பொழுது சிக்கென இருந்து பின்னர் உடல் எடை அதிகரித்த அவர் தற்போது தனது உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்மிற்கு சென்றுள்ளார். 

மேலும் அங்கிருந்தபடி புகைப்படம் ஒன்றை லாஸ்லியா  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் தனது திரைப்பயணத்திற்கு தயாராகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.