நீ திரும்பி வந்துருக்க, நான் விரும்பி வந்துருக்கேன்! வெறித்தனமாக பேசிய பிக்பாஸ் ஜூலி!

நீ திரும்பி வந்துருக்க, நான் விரும்பி வந்துருக்கேன்! வெறித்தனமாக பேசிய பிக்பாஸ் ஜூலி!


bigboss juli punch dialog

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஜூலி.  இவர் நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலருக்கு அதிகப்படியான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அதற்கு பிறகுதான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

 பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

bigboss juli

இவர் அம்மன் தாயி படத்தில் தெய்வ அம்சம் கொண்ட பெண்ணாக ஜூலி நடித்துள்ளார். இந்தப் படத்தை மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் ஆகியோர் இயக்கியுள்ளனர். அன்பு சரண் என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வெளியானதும் நெட்டிசன்கள் பலர் ஜூலியை நக்கலடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த படத்தில் தெய்வமாக தோன்றும் ஜூலி "செத்தவன் நீ திரும்பி வந்திருக்க, உன்ன அழிக்க நான் விரும்பி வந்திருக்கேன்" என்ற பஞ்ச் டைலாக் பேசியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.