சினிமா

வாவ்.. கேபி சிறுவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா! அதுவுடன் எந்த மாஸ் ஹீரோவோட இருக்காரு தெரியுமா?

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்ச

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. பிக்பாஸ் வீட்டில் இருந்த போது யாரைக் குறித்தும் குறை பேசாமல் அனைவருடனும் அன்பாகவும், பேசவேண்டிய இடங்களில் தனது கருத்துக்களை தைரியமாக கூறி வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது அசத்தலான நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்த கேபி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள் ஷோவில் நடுவர்களுள் ஒருவராக பங்கெடுத்து வருகிறார். 

மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது கேப்ரியல்லா நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேபி தனுஷின் 3 படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement