இது பிக்பாஸா இல்லை பைப்படி சண்டையா? விஜயகுமார் மகளின் சண்டை காட்சிகள்! வைரல் வீடியோ!

இது பிக்பாஸா இல்லை பைப்படி சண்டையா? விஜயகுமார் மகளின் சண்டை காட்சிகள்! வைரல் வீடியோ!


bigboss fight


பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த மூன்றாவது சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதனால் மூன்றாவது சீசன் மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து போட்டியாளர்கள் பலருக்கும் ரசிகர்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கூட முழுமையாக முடியவில்லை ஆனால் அதற்குள் பைப்படியில் சண்டை போடும் அளவிற்கு பரபரப்பாகி உள்ளது.

இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் மீராவிற்கும், வனிதாவிற்கும் வாக்குவாதம் ஏற்படும் காட்சிகளை புரோமோவாக ஒளிபரப்பிவருகின்றனர். இதனை பைப்படி சண்டை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.