சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இந்த பிரபலமா? லீக்கான ஷாக் தகவல்!!

Summary:

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இந்த பிரபலமா? லீக்கான ஷாக் தகவல்!!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இதில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், திருநங்கையான நமிதா சில காரணங்களால் அவரே வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து நாடியா சாங், அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஜக்கி பெரி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனர். இந்நிலையில் அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவரை தொடர்ந்து நடிகர் சஞ்சய் மற்றும் அமீர் ஆகியோரும் களமிறங்கினர்.

இந்த நிலையில் அபிஷேக் மறுபடியும் கடந்த வாரம் எலிமினேட் ஆனார். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் அபினய், நிரூப், இமான், சிபி, அக்ஷரா, அமீர் ஆகியோர் போட்டியாளர்களால் எலிமினேட் செய்ய நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களில் அபினய் இந்த வார இறுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உண்மைதானா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். 


Advertisement