சினிமா

தயவுசெஞ்சு அப்படி பேசாதீங்க! பிரபல நடிகைக்காக உருக்கமாக பிக்பாஸ் பாலா வெளியிட்ட பதிவு!

Summary:

நடிகை ஷெரினை பற்றி மோசமாக பேசாதீர்கள் என பிக்பாஸ் பாலா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி  வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி நடிகையும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஷெரினை பற்றி தவறாக பேசாதீர்கள் என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் நான் நடிகை ஷெரினை பற்றி சிலர் மோசமாக பதிவிட்டிருப்பதை கவனித்தேன். அவர் எனது நல்ல தோழி. தயவுசெய்து இது போன்று சமூக வலைதளங்களில் மோசமான கருத்துக்களை பதிவிடாதீர்கள் என கூறியுள்ளார்.


Advertisement