
பிக்பாஸ் அபிராமி தற்போது உடல் எடை அதிகரித்து ஆண்டி போல மாறிவிட்டார். இத்தகைய புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அபிராமி. ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் சிறந்த தொகுப்பாளினியாக விளங்கிய அவர் பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல், முகேனுடன் காதல் என பல சர்ச்சைகளில் சிக்கினார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபின் அவர் சக போட்டியாளர்களின் வீட்டிற்கு சென்று நட்பை தொடர்ந்தார். மாடல் நடிகையான அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் அபிராமி சமீப காலத்தில் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார். இந்நிலையில் அவர் தற்போது உடல் எடை அதிகரித்து ஆண்டி போல மாறிவிட்டார். இத்தகைய புகைப்படம் வைரலாக அதனைக் கண்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
Advertisement
Advertisement