சினிமா

மனைவியை பிரிந்தேனா?? முடிவுக்கு வந்த விவாகரத்து பிரச்சினை! உண்மையை உடைத்த பிக்பாஸ் அபிநய்!!

Summary:

மனைவியை பிரிந்தேனா?? முடிவுக்கு வந்த விவாகரத்து பிரச்சினை! உண்மையை உடைத்த பிக்பாஸ் அபிநய்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அபிநய். 80 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் வீட்டில் இருந்த அபிநய் பாவனியால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.  இந்த நிலையில் அபிநயின் மனைவி அபர்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அபர்ணா அபிநய் என்று வைத்திருந்த தனது பெயரை அபர்ணா வரதராஜன் என்று மாற்றினார்.

இந்த நிலையில் அபிநய் மற்றும் அவரது மனைவி இருவரும் பிரிய போவதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அபிநய் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சில வாரங்கள் முன்பு எலிமினேட் ஆனார்.

இந்த நிலையில் அவர் அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர்  உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா? என கேட்டுள்ளார். அதற்கு அவர், இது முற்றிலும் தவறான செய்தி. யாரோ வதந்தியை பரப்பியுள்ளனர். நானும் எனது மனைவியும் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். மேலும் அபிநய் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.


Advertisement