பிக் பாஸ் சீசன்-3 யை தொகுத்து வழங்கும் பிரபலம். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே களமிறங்குகிறார்.

Summary:

big boss seson-3 new entertainer

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனையும் நடிகர் கமல்காசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் சீசன்1 நிகழ்ச்சியை  நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த  நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியுடன்  நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் சீசன்2 வையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்துள்ளது

Image result for rithvika

பிக்பாஸ் சீசன்1 ன் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட  பிக் பாஸ் சீசன் 2 நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இதன் வெற்றியாளராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த இரண்டு சீசன்களும்  நிறைவடைந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இருந்ததைவிட ரசிகர்களின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் குவிந்துள்ளதால் பிக் பாஸ் சீசன்3 விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவது என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

Image result for kamal haasan

இந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப்போட்டி நிகழ்ச்சியின் இடையே மிகுந்த 
ஆவலுடன் ரசிகர்கள் நடிகர் கமல்ஹாசனிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது கூறிய அவர், நீங்கள் விரும்பினால் சீசன்3 நிகழ்ச்சியையும் நானே தொகுத்து வழங்குவேன் என்று கூறினார். மேலும் மக்களுடன் நேரடியாக கலந்து உரையாடுவதற்கு இது ஒரு சிறந்த களமாக இருப்பதாகவும் தெரிவித்தார். 

 பிக் பாஸ் சீசன்1  நிகழ்ச்சியின்போது தனது அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சி இடையே தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வழியாக நல்ல ஒரு அரசியல் அடித்தளத்தை அமைக்கும் முயற்சியில் இறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement