சினிமா பிக்பாஸ்

சித்தப்பு சரவணன் பிக் பாஸில் இருந்து வெளியேற இதுதான் காரணமா - வெளியான வீடியோவால் பரபரப்பு!

Summary:

Big boss saravanan

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 43 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை 5 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார் 

அதற்கு காரணம் சேரனை அவமதித்ததற்காக திரையுலகினர் பொங்கி எழுந்ததால் திரையுலகினர்களை சமாதானப்படுத்த சரவணன் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர். 

இன்னொரு தரப்பினர் கடந்த சனிக்கிழமை அன்று கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கும்போது சரவணன் கூறிய ஒரு வார்த்தை தான் அவர் வெளியேற காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அதாவது ஆள் மாறி கேள்வி கேட்கும் டாஸ்க் ஒன்றை கமல்ஹாசன் நடத்தியபோது கமலஹாசன் லாஸ்லியாவிடம் டாஸ்க் குறித்து விலக்கி கொண்டிருந்தார். அப்போது சரவணன் மிக மெதுவான குரலில் 'கோர்த்து விட்றாண்டா' என்று கூறியது ஒருசிலருக்கு மட்டும் கேட்டது. இதனை மற்ற போட்டியாளர்கள் சரியாக கவனிக்க வில்லை என்றாலும் கமல்ஹாசன் நிச்சயம் கவனித்திருப்பார்.

எனவே நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது எதிர்ப்பை அவர் பிக்பாஸ் குழுவினரிடம் தெரிவித்திருப்பார் என்றும், கமலஹாசனை திருப்திப்படுத்தவே வேறு வழி இன்றி சரவணனை பிக்பாஸ் குழுவினர் வெளியேற்றி இருக்கலாம் என்றும், ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் கமல்ஹாசன் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் பழைய காரணம் ஒன்றை வெளியேற்ற கையில் எடுத்துள்ளதாகவும் சமூக வலைதள பயனாளிகள் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement