இதுக்கு ஒரு எண்ட் கார்டே இல்லையா.. பாரதி கண்ணம்மா - 2..!

இதுக்கு ஒரு எண்ட் கார்டே இல்லையா.. பாரதி கண்ணம்மா - 2..!


bharathi-kannamma-2-new-entry-serial

பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் சீசனில், ரோஜா தொடரில் நாயகனாக நடித்திருந்த சிபு சூர்யன் முதன்மையான கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். முதல் சீசனில் நடித்த வினுஷா தேவியே இந்த இரண்டாவது பாகத்திலும் நாயகியாக நடிக்கவிருக்கிறார். 

பெரும்பாலும் அதிக அளவு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தொடர்களில் முதல் பாகம் முடிந்த பிறகு அதன் இரண்டாம் பாகம் தொடர்வதுண்டு. அதன் வரிசையில் சில சீரியல்களான கனா கானும் காலங்கள், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி என இருந்த வரிசையில் தற்போது பாரதி கண்ணம்மாவும் இணைந்துள்ளது. 

Bharathi kannama 2

கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளை தாண்டிய நிலையில், முதல் பாகமானது அவர்களது இருவரின் திருமணத்தில் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பாரதி கண்ணம்மாவின் இரண்டாவது பாகத்தின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. 

புரோமோவில் வெளியான காட்சியில் ஹீரோவாக சிபு சூர்யனும், கதாநாயகியாக முதல் பாகத்தில் நடித்திருந்த வினுஷா தேவியும் நடித்துள்ளார். முதலில் ரோஷினி கதாநாயகியாக இருந்த நிலையில், சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக தான் வினுஷா தேவி தொடர்ந்து நடித்திருப்பார். 

Bharathi kannama 2

ரோஷினியின் மீதி பாகங்களை அழகாக தனது நடிப்பின் மூலம் வெளிக்காட்டி மக்களின் மனதில் நின்றுள்ளார் வினுஷா. சிபு சூர்யன் ஏற்கனவே ரோஜா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து பல மக்கள் மற்றும் இளம் பெண்களின் மனதில் இடம் பிடித்தவர்.  இத்தொடரானது வருகிற 6ம் தேதி முதல் வழக்கம் போல் தினமும் இரவு 9 மணி முதல் 9:30 வரை ஒளிப்பரப்பாக இருக்கிறது.