திருமணத்திலும் டுவிஸ்ட்டா?.. பாரதி கண்ணம்மா சீரியல் அப்போ முடியாதா?.. தாலிய காணுமாமே..! ரசிகர்கள் குமுறல்..!!

திருமணத்திலும் டுவிஸ்ட்டா?.. பாரதி கண்ணம்மா சீரியல் அப்போ முடியாதா?.. தாலிய காணுமாமே..! ரசிகர்கள் குமுறல்..!!


bharathi kannama weekly promo

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நெடுந்தொடர் பாரதிகண்ணம்மா. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து விடமாட்டார்களா? என்று ரசிகர் கூட்டமே எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திரும்பும் இடமெல்லாம் மக்களுக்கு ட்விஸ்ட் வைத்த பாரதி கண்ணம்மா இயக்குனர் குழு, இறுதிவரை மக்களை பரபரப்புடன் எடுத்துச்சென்றது. 

bharathi kannama serial

இந்த நிலையில் கடந்த வாரத்தில் மருத்துவரான பாரதியும், கண்ணம்மாவும் இணைந்து விட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் சீரியல் முடிந்துவிடும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த இயக்குனர், பாரதி - கண்ணம்மாவின் திருமண வைபோக நிகழ்வை நிகழ்த்த திட்டமிட்டார்.

bharathi kannama serial

இந்த வாரம் திருமண வைபோகம் வைத்து சீரியல் முடிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் பாரதி தனது மனைவி கண்ணம்மாவிற்காக தன் கையால் முகூர்த்த பட்டுபுடவையை நெய்கிறார். இதில் அவரது கைகளில் பலத்தகாயம் ஏற்பட்டும், அவர் புடவையில் 'கண்ணம்மா' என்ற பெயரை நெய்துள்ளார். 

அத்துடன் தாலி செய்யும் நேரத்தில் கண்ணம்மாவின் பழைய தாலியின் தங்கம் காணாமல் போனதால் பாரதி, கண்ணம்மாவின் தாயின் தாலியை கொடுத்து தாலி செய்ய சொல்கிறார். இதை கண்ட கண்ணம்மாவிற்கு கண்கலங்க பாரதி கட்டியணைக்க என இந்த வார ப்ரோமோ மிகவும் ரொமான்டிக்காக வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை கண்ட சில நெட்டிசன்கள் இந்த சீரியல் முடியாது போல என கூறி வருகின்றனர்.