செம ஹேப்பியாக நடிகர் சிம்புக்கு நன்றி கூறிய காமெடி நடிகர் பாலசரவணன்! இதுதான் ஸ்பெஷலா? வைரலாகும் புகைப்படம்!

செம ஹேப்பியாக நடிகர் சிம்புக்கு நன்றி கூறிய காமெடி நடிகர் பாலசரவணன்! இதுதான் ஸ்பெஷலா? வைரலாகும் புகைப்படம்!


Balasaravanan birthday photo viral

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில்  மாதவ் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.  அப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். 

மேலும் கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் பாரதிராஜா, மனோஜ், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிம்பு முழுவதும் உடல்எடையை குறைத்து நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் காமெடி நடிகர் பாலசரவணனின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சிம்பு அவருக்கு கேக் வெட்டி, அன்பளிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைவருக்கும் நன்றி கூறி பாலசரவணன் புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அத்தனை அன்பையும் அள்ளி தந்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப்பிறந்நாளை மாற்றியதற்கு அன்பு சகோதரர் சிம்புவுக்கு மனமார்ந்த நன்றி. மாபெரும் வாய்ப்பளித்து இவ்வினிய தருணத்திற்கு காரணமான அன்பு இயக்குனர் சுசீந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.