காதல் பாடலா? பிட்டு படமா?.. பேட் நியூஸ் படத்தின் கவர்ச்சி பாடல்.. விழிபிதுங்கும் நெட்டிசன்கள்.!Badnewz Movie Jaanam Song Sexiest Song of the Year 

 

ஆனந்த் திவாரி இயக்கத்தில், நடிகர்கள் விக்கி கவுஷல், திருப்தி திமிரி, அம்மி விர்க உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் பேட் நியூஸ் (Badnewz).

தோழி ஒருத்தியுடன் இரவில் தனிமையில் இருக்கும் இளைஞனும், எதிர்பாராத விதமாக கர்ப்பமாகும் நாயகியும் என காதல், காமம், காமெடி சார்ந்த கதை அம்சத்துடன் படம் உருவாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: அடி தூள்... விஜய் சேதுபதியின் மகாராஜா ஓடிடி ரிலீஸ் எப்போது.? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.!!

பொதுவாக ஹிந்தி படங்களில் கவர்ச்சி என்பது தாராளமாக இருக்கும். அது அவர்களுக்கு இயல்பு எனினும், சமீபகாலமாக கூடுதல் கவர்ச்சியை தந்து ரசிகர்களின் ஆதரவை பெறவும் முயற்சித்து வருகின்றனர். 

இந்நிலையில், பேட் நியூஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜனம் பாடல் நாளை வெளியாகிறது. இந்த பாடலை கவர்ச்சிப்பட உருவாகியுள்ள படக்குழு, இந்த ஆண்டுக்கான மிகுந்த கவர்ச்சி கொண்ட பாடலாக அதனை கட்டமைத்து இருக்கிறது. 

இந்த பாடலை நாளை வெளியிடும் நிலையில், அதன் முன்னோட்டமாக பாடலில் உள்ள சில காட்சிகளை வெளியிட்டு இருக்கிறது. அந்த காட்சிகள் படத்தை குழந்தைகளுடன் பார்க்க இயலாத வண்ணம் அமைந்துள்ளது. இதனை நெட்டிசன்கள் தங்களின் நினைப்புப்படி வசைபாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: "ஆர்த்தி செய்த இந்த விஷயம் ஜெயம் ரவியை அப்செட் செய்தது.." பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்.!!