அடி தூள்... விஜய் சேதுபதியின் மகாராஜா ஓடிடி ரிலீஸ் எப்போது.? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.!!vijay-sethupathi-super-hit-flm-maharaja-ott-release-dat

கடந்த மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற விஜய் சேதுபதியின் கிரைம் திரில்லர் மகாராஜா ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் பின்னர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு என ஆல் இந்தியா ஸ்டார் ஆக விஜய் சேதுபதி வலம் வந்தார். இவர் வில்லனாக நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் ஹீரோவாக நடித்த படங்கள் சமீபகாலமாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தனது 50 வது திரைப்படமான மகாராஜா மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

பிரம்மாண்ட வெற்றி

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் மம்தா மோகன் தாஸ், நட்டி என்ற நடராஜன், ஹிந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்குனர் பாரதிராஜா மற்றும் முனீஸ் காந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பழி வாங்குவதை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 50-வது திரைப்படம் ஒரு சில நடிகர்களுக்கே மிகப்பெரிய வெற்றியாக அமையும். அந்த வகையில் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தமிழ் சினிமா உலகம் கொண்டாடியது.

இதையும் படிங்க: "ஆர்த்தி செய்த இந்த விஷயம் ஜெயம் ரவியை அப்செட் செய்தது.." பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்.!!

வெளியான ஓடிடி ரிலீஸ் தேதி

இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மகாராஜா திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி இருந்த நெட்ஃபிக்ஸ் நிறுவனம் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி இந்த திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தளபதி 69: சமூக வலைதள சர்ச்சை.!! சமந்தாவை டிராப் செய்த பட குழு.? பரபரப்பு தகவல்.!!