தளபதி 69: சமூக வலைதள சர்ச்சை.!! சமந்தாவை டிராப் செய்த பட குழு.? பரபரப்பு தகவல்.!!after-the-social-media-controversy-actress-samantha-may

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இந்நிலையில் சமந்தாவின் திருமண வாழ்வு விவாகரத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவுக்கு மயோசைட்டிஸ் என்னும் நோய் ஏற்பட்டது. இந்த நோயிலிருந்து குணமான அவர் தற்போது தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்த தளபதி 69 திரைப்படத்திலிருந்து அவர் நீக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகி கோலிவுட்ல அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் - சமந்தா ஜோடி

கத்தி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு முதல் முறையாக ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. இதனைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கிய தெறி மற்றும் மெர்சல் திரைப்படங்களிலும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில் தளபதி விஜயின் 69 -வது படத்தை எச் .வினோத் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

Kollywood

சமந்தாவின் சர்ச்சை பதிவு

இந்நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று அவர் விஜய்யுடன் ஜோடியாக சேர உள்ள திரைப்படத்திற்கு தடையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசித்தால் காய்ச்சல் குணமாகும் என தனக்கு ஒரு மருத்துவர் அறிவுரை வழங்கியதாக சமந்தா பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிராக கருத்துப் பதிவு செய்த லிவர் மருத்துவர் ஒருவர் அமெரிக்க ஆஸ்துமா கழகம் தடை செய்த விஷயத்தை சமந்தா பரப்புவதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மிகப் பெரிய விவாதம் சமூக வலைதளங்களில் அரங்கேறியது.

இதையும் படிங்க: வாவ் சூப்பர்... சர்வதேச விருதை வென்ற கேப்டன் மில்லர்.!! படக்குழுவிற்கு குவியும் பாராட்டுக்கள்.!!

தளபதி 69-ல் டிராப் ஆகும் சமந்தா.?

மருத்துவர் மற்றும் சமந்தா ஆகியோர் பிசினஸ் பின்புலத்தில் மக்களின் உயிருடன் விளையாடுவதாக சமூக வலைதளத்தில் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் நடிகை சமந்தா மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இதன் காரணமாக தளபதி 69 திரைப்படத்திலிருந்து அவரை நீக்கிவிட்டு வேறொரு நாயகியை ஒப்பந்தம் செய்ய தளபதி விஜய் தரப்பிலிருந்து தெரிவித்ததாக கோலிவுட்ல செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: சூர்யா குடும்பத்தை தொடர்ந்து நிராகரிக்கிறாரா ஜோதிகா.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!