தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
சூர்யா குடும்பத்தை தொடர்ந்து நிராகரிக்கிறாரா ஜோதிகா.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
தமிழ் சினிமா நட்சத்திர ஜோடிகளில் டாப் ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் கடந்த வருடம் சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் குடி பெயர்ந்தார். சூர்யா தனது குடும்பத்தை விட்டு பிரிந்து மும்பையில் குடியேறியதற்கு ஜோதிகா தான் காரணம் என்று ஒரு பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் சூர்யா குடும்பத்திற்கும் ஜோதிகாவுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சூர்யா - ஜோதிகா ஜோடி
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா நடிகை ஜோதிகா உடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் இணைந்து நடித்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஜோடி காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இணைந்து நடித்தனர். பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடிக்கும் போதே சூர்யா மற்றும் ஜோதிகா இடையே காதல் மலர்ந்தது.
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் நீண்ட காலம் காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 2006 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இதையும் படிங்க: அடி தூள்... கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் பிரபலம்.!! ரசிகர்கள் கொண்டாட்டம்.!!
மும்பையில் குடியேறிய சூர்யா - ஜோதிகா
மேலும் சமீப காலமாக ஜோதிகா சில திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தான் சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு சூர்யா மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த வருடம் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் மும்பையில் குடியேறினர். இதற்கு சூர்யா குடும்பத்தினருக்கும் ஜோதிகாவிற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம் என்று கூறப்பட்டது.
சூர்யா குடும்பத்தை நிராகரிக்கும் ஜோதிகா
இந்நிலையில் ஜோதிகா எப்போது சென்னை வந்தாலும் சூர்யாவின் குடும்பத்தை நிராகரிப்பதாக புதிய செய்திகள் பரவி வருகின்றன. நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் மிகவும் கண்டிப்பானவர். அவர்களது குடும்பம் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். தனது குடும்பத்திற்காக சூர்யா கட்டிய வீட்டில்தான் அனைவரும் வசித்து வருகின்றனர். எனினும் வேலை விஷயமாக சென்னை வந்தாலும் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டில் ஜோதிகா தங்குவதில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை வரும் ஜோதிகா ஹோட்டலில் ரூம் புக் செய்து தங்கி தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு கிளம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் சூர்யா குடும்பத்திற்கும் ஜோதிகாவிற்கும் இடையேயான பஞ்சாயத்து மேலும் தீவிரமடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனாலும் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இதையும் படிங்க: வாவ்... ராயன் இசை வெளியீட்டு விழா எப்போது.? ரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ்.!!