"ஆர்த்தி செய்த இந்த விஷயம் ஜெயம் ரவியை அப்செட் செய்தது.." பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்.!!aarthi-activities-drive-jeyam-ravi-crazy-journalist-and

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவருக்கும் இவரது மனைவி ஆர்த்திக்கும் இடையேயான மனக்கசப்பு தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்படுவதற்கான காரணத்தை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி - ஆர்த்தி திருமணம்

ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய ஜெயம் ரவி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பேராண்மை, தனி ஒருவன், அடங்கமறு மற்றும் கோமாளி போன்ற திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவருக்கும் பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்பவரது மகள் ஆர்த்தி என்பவருக்கும் இடையே ஜூன் 2009ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

Kollywood

குடும்ப வாழ்க்கையில் விரிசல்

கடந்த 15 வருடங்களாக இணை பிரியாத தம்பதியாக வாழ்ந்து வந்த ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினரிடையே தற்போது விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படத்தை அவரது மாமியார் தான் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்படவில்லை. இதன் காரணமாக ஜெயம் ரவியை வைத்து அடுத்த படத்தையும் தயாரிக்க முடிவு செய்து இருக்கிறார் அவரது மாமியார் சுஜாதா. இந்நிலையில் ஜெயம் ரவி தனது மாமியாரிடம் 25 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: தளபதி 69: சமூக வலைதள சர்ச்சை.!! சமந்தாவை டிராப் செய்த பட குழு.? பரபரப்பு தகவல்.!!

அந்தணன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே ஏற்பட்ட பிரிவிற்கு முக்கியமான காரணத்தை பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக யூட்யூப் சேனலில் பேசிய அவர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் சந்தேக குணம் தான் அவர்களது பிரிவிற்கு காரணம் என தெரிவித்துள்ளார். எப்போதும் ஜெயம் ரவியின் மீதான சந்தேகத்தில் ஆர்த்தி தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்வதாக குறிப்பிட்ட அந்தணன், ஜெயம் ரவி போனை எடுக்கவில்லை என்றால் அவரது மனைவி நேரடியாக சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து விடுவார் எனவும் தெரிவித்திருக்கிறார். நாளடைவில் ஜெயம் ரவியால் இந்த தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இருவரிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாவ் சூப்பர்... சர்வதேச விருதை வென்ற கேப்டன் மில்லர்.!! படக்குழுவிற்கு குவியும் பாராட்டுக்கள்.!!