அஜித் மகளா இது? ஹீரோயின் அளவிற்கு வளந்துட்டாரே! புகைப்படம்!
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது தீரன் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம். பிங்க் படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ் ரீமேக் மீதும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10 ல் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக வந்த விஸ்வாசம் படம் தியேட்டரில் இன்னும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை பாடைத்துள்ளது விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தவர் பேபி அனிகா.
இவர் ஏற்கனவே அஜித்துடன் என்னை அறிந்தால் படத்திலும், ஜெயம் ரவிக்கு தங்கையாக மிருதன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது சமூகவலைதளமான தன் டிவிட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் நன்கு வளர்ந்து பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே தோற்றமளிக்கிறார் அனிகா. இதோ அந்த புகைப்படம்.
— Anikha Surendran (@Anikhaofficial_) March 10, 2019