சினிமா

அழகி படத்தில் நடித்த சிறுவயது பார்த்திபனா இது? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? ஆளே மாறிட்டாரே!

Summary:

பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்திருந்த நடிகரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்திருந்த நடிகரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

நடிகர் பார்த்திபன் நடிப்பில், இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் அழகி. படத்தில் பார்த்திபனுடன் நடிகைகள் நந்திதா தாஸ்,தேவயானி ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது.

அழகி படத்தில் பார்த்திபனைவிட, சிறுவயது பார்த்திபனாக நடித்திருந்த கதாபாத்திரத்தின் நடிப்பும், அதன் முக்கியத்துவமும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. சிறுவயது பார்த்திபனாக அழகி படத்தில் நடித்திருந்தவரின் பெயர் சதீஷ்.

அழகி படத்தின் மூலம் இவர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி இருந்தாலும், என்ன காரணமோ தெரியவில்லை இவருக்கு அடுத்ததாக பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் மகான் இல்லை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார் சதீஷ். இந்நிலையில் 2002 ஆண்டு, ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதோ அவரது தற்போதைய புகைப்படம்.


Advertisement