வேற லெவல் ப்ரோ!! பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!! வீடியோ இதோ!!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால், கலகலப்பான குணத்தால் முன்னேறி ஏ


ayalan movie single song released today

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால், கலகலப்பான குணத்தால் முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அனைத்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில்  சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு பிறந்தநாள் ஸ்பெஷலாக அயலான் படத்தில் இடம்பெறும் வேற லெவல் சகோ என்ற பாடல்  இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் அயலான்  படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள வேற லெவல் சகோ என்ற சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.