அடஅட.. புதிய அவதாரம் எடுக்கும் அட்டக்கத்தி தினேஷ்! அவரே வெளியிட்ட புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!!Attakathi dinesh became director

 2012-ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அட்டகத்தி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் தினேஷ். இப்படத்தில் நடித்ததற்கு பிறகு அவர் அட்டகத்தி தினேஷ் என அழைக்கப்பட்டார். மேலும் நடிகர் தினேஷ் அப்படத்தை தொடர்ந்து குக்கூ, விசாரணை, கபாலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

மேலும் தினேஷ் நடித்த நானும் சிங்கிள் தான் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது நடிகர் தினேஷ் இயக்குனராக அவதாரமெடுக்கிறார்.அதாவது அவர் வயிறுடா என்ற படத்தை இயக்குகிறார்.  

இந்நிலையில் நடிகர் தினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் ஒருவர் வில் அம்புடன் குறிபார்த்துக் கொண்டிருப்பது போன்றும் அதில் வயிறுடா என படதலைப்பு இருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படம் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.