ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
இயக்குனர் அட்லீயின் திருமணத்தில் நயன்தாரா! கூட யார்னு பார்த்தீங்களா! யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!!
இயக்குனர் அட்லீயின் திருமணத்தில் நயன்தாரா! கூட யார்னு பார்த்தீங்களா! யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் ராஜாராணி படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.
அதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து படங்களை இயக்கியிருந்தார். அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. மேலும் அட்லீ தற்போது அடுத்ததாக பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார்.
அட்லீயின் மனைவி பிரியா. இவரும் தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அட்லீ திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நயன்தாரா, பிரபல நடிகரான ஆர்யாவுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போதுதான் அட்லீ ராஜாராணி படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.